வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் அருகே விபத்து - பெரும்பாக்கத்தை சார்ந்த இளைஞர் பலி | Melmaruvathur Two Wheeler Accident
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 24, 2020

மேல்மருவத்தூர் அருகே விபத்து - பெரும்பாக்கத்தை சார்ந்த இளைஞர் பலி | Melmaruvathur Two Wheeler Accident

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவறி விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது  மகன் மூர்த்தி (வயது 24).இவர் தனது நண்பர் சாந்தகுமார் (வயது 20) என்பவருடன், நேற்று முன்தினம் மாலை, மதுராந்தகத்தில் இருந்து பெரும்பாக்கத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
 

மேல்மருவத்துார் அருகே, நிலை தடுமாறிய இவரது இருசக்கர வாகனம் விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இருவரில் மூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேல்மருவத்துார் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment