வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடக்கவிருந்த, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது Monday Pettition and Farmers grievance dates are postponded
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 18, 2020

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடக்கவிருந்த, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது Monday Pettition and Farmers grievance dates are postponded

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால்,நேற்று காலை 10:00 மணிக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் நடக்கவிருந்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20ல் நடைபெற இருந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.


ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் மற்றொரு நாள் நடைபெறும் என, இரு மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.


இதே போல திருவள்ளூர் மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, இம்மாதம், 31ம் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத் தீர்க்கும் கூட்டம். மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment