வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் | Acharapakkam Inspector Corona Awarness
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 18, 2020

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் | Acharapakkam Inspector Corona Awarness

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம், அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் கோவிட் -19 கரோனா வைரஸ் (Corona Virus Precaution Awareness)  தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக , காவல்நிலைய நுழைவு வாயிலில் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவிட, கிருமிநாசினி மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி வைக்கப்பட்டது.மேலும்  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் கன்னியப்பன், குமார், மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் ஆகியோர் கலந்துகொண்ட, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பது, வணிக வளாகம், திரையரங்கு என இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்ட அரசின் உத்தரவை பொதுமக்கள், நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வது, தொடர்ந்து கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்வது, கோவிட் -19 தொடர்பான அரசின் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை மக்களுக்கு தெரிவிப்பது மற்றும் தவறான வதந்திகளை பரவ விடாமல் தடுப்பது உள்ளிட்டவை தெடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது.
No comments:

Post a Comment