வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடைகளை சீல் வைக்கத் தொடங்கினார் மதுராந்தகம் கோட்டாட்சியர் | RDO Sealed shops in Madurantakam Circle
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, March 30, 2020

கடைகளை சீல் வைக்கத் தொடங்கினார் மதுராந்தகம் கோட்டாட்சியர் | RDO Sealed shops in Madurantakam Circle

கொரனா  வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அதிக நபர்கள் கூட்டம் சேர கூடாது என்றும் மேலும் உணவுகளில் உணவுகளை  பார்சல் செய்து விநியோகம் செய்ய வேண்டும் என்றும்,  அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 
விதிமுறைகளை மீறியும்,  நோய்த்தொற்றின் ஸ்திரத்தன்மையை உணராமலும்  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்,  படளாம் (கூட்ரோடு ) கிராமத்தில்  உள்ள "ஹோட்டல் மகேந்திரா சைவம் மற்றும் அசைவம்" என்ற  உணவக  நிறுவனர் அரசின்  விதிமுறைகளை  மீறியும்,   கூட்டமாகவும்,  நள்ளிரவு 12.00மணிக்குமேல்  உணவகத்தை நடத்தி வந்தார்.
விவரத்தினை அறிந்து மேற்படி  ஓட்டலினை    மதுராந்தகம்  வருவாய்  கோட்டாட்சியர் அவர்கள்  முன்னிலையில்  நேற்று  (29.03.2020) நள்ளிரவு சுமார் 12.00 மணி அளவில்  சீல் வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வின்போது மதுராந்தகம்  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வையாவூர் வருவாய் ஆய்வாளர்,  படாளம் காவல் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment