வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்தியாவைக் கடுமையாக பாதித்த நோய்களின் வரலாறு | Dangerous diseases in Indian history
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, March 30, 2020

இந்தியாவைக் கடுமையாக பாதித்த நோய்களின் வரலாறு | Dangerous diseases in Indian history

கொரோனா வைரஸ் மீதான அச்சத்தால் இந்தியாவே முடங்கிப் போயுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எங்கு பார்த்தாலும் கரோனா வைரஸ் பற்றிய செய்திகளாகவே உள்ளன. இதேபோல் இந்தியாவை இதற்கு முன் முடக்கிப் போட்ட நோய்களைப் பற்றி அறிந்து கொள்வோம்:
 
காலரா (1899-1923)
19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இந்தியா முதல் மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யா வரை வரை மிகப்பெரிய அளவில் காலரா பரவியது.
ஆறாவது காலரா என்று அழைக்கப்பட்ட இந்த நோயின் தாக்குதலில் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள்.லியனார்ட் ரோஜர்ஸ் என்ற வரலாற்று அறிஞரின் ஆய்வுப்படி, இந்த காலரா நோய் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவின்போது தொடங்கி, பின்னர் பஞ்சாப் வழியாக பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது.

வசதிகள் அதிகம் இல்லாத இந்த காலகட்டத்தில் காலரா நோயைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இதன் காரணமாக ஒரு ஊரில் காலரா நோய் பரவினால், மக்கள் அந்த ஊரைவிட்டே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் இந்தியாவை ஆட்டிப்படைத்த இந்த காலராவால் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா மாகாணங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன.

ஆங்கிலேய அரசின் கணக்குப்படி 1904-ம் ஆண்டில் 1,89,955 நபர்களும், 1905-ம் ஆண்டு முதல் 1908-ம் ஆண்டுவரை 5,26,000 நபர்களும் பலியானார்கள். இந்த காலராவை கட்டுப்படுத்த அரசு கடுமையாக போராடவேண்டி இருந்தது.
ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish flu) – 1918
H1N1 வைரஸால் உலகமெங்கிலும் மிக வேகமாக பரவிய ஸ்பானிஷ் ப்ளூ எனும் கொள்ளை நோயை இந்தியர்களால் மறக்க முடியாது. உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் மக்களை பாதித்த இந்த ப்ளூ ஜுரத்தால் சுமார் 50 மில்லியன் பேர் பலியானார்கள்.
இந்த நோயால் இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த கொள்ளை நோய் மகாத்மா காந்தியையும் விட்டுவைக்கவில்லை.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு குஜராத்தில் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தியை, அவரது 48-வது வயதில் ப்ளூ ஜுரம் தொற்றிக் கொண்டது.
இந்தக் காலகட்டத்தில் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தார் காந்தியடிகள். பல நாட்களுக்கு நீர் ஆகாரத்தை மட்டும் உண்டு அவர் இந்த நோயில் இருந்து மீண்டார்.

அவருடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்த பலருக்கும் இந்நோய் தொற்றியுள்ளது. ஆனால் மிகச்சிறந்த மருத்துவம் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் அவர்கள் மீண்டனர்.
ஆனால் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்தவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பெருவாரியான இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த நோயின் தாக்குதலால் பலியானார்கள்.
முதலாம் உலகப் போரைவிட மிக அதிக அளவில் இந்நோய்க்கு இந்தியர்கள் பலியானார்கள். கங்கை நதியில் இந்த காலகட்டத்தில் பிணங்கள் மிதந்தகாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 6 சதவீதத்தை இந்த ஸ்பானிஷ் ப்ளூ காவு வாங்கியது.
வரலாற்று அறிஞரான ஜே.எஸ்.டர்னர் இதைப்பற்றி குறிப்பிடும்போது, “இரவு நேரத்தில் நகருக்கு வந்து அனைத்துச் செல்வங்களையும் கொள்ளையடித்து செல்லும் திருடனைப்போல், இந்த இந்நோய் மக்களை கொள்ளையடித்துச் சென்றது” என்கிறார்.
இந்த நோயுடன் சேர்த்து நாட்டில் பஞ்சமும் வர, இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஏஷியன் ப்ளூ (Asian flu) – 1957
ஆசிய நாடுகளில் தொடங்கி, பின்னர் உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் ஜுரத்தால் உலகம் முழுக்க சுவார் 20 லட்சம் பேர் பலியானார்கள். H2N2 என்ற வைரஸால் உருவான இந்த நோயும் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்நோய்க்கு பலியானார்கள். 2 தவணைகளாக உலகைத் தாக்கிய இந்நோய், முதல் தவணையில் குழந்தைகளையும் இரண்டாவது தவணையில் முதியவர்களையும் அதிகம் பாதித்தது.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இம்முறை இந்நோயைக் கட்டுப்படுத்த விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 
ஹாங்காங் ப்ளூ (Hong Kong flu) -1968
கரோனா வைரஸைப் போலவே இந்த வைரஸும் சீனாவில் இருந்துதான் உலகில் பரவத் தொடங்கியது. H3N2 என்ற இந்த வைரஸ் ஹாங்காங்கில் உற்பத்தியாகி உலகம் முழுவதும் பரவியது.
இந்தியாவில் இந்த வைரஸால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். உலகம் முழுக்க இந்த வைரஸால் சுமார் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

No comments:

Post a Comment