வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் | 29.03.2020 | Corona Precaution steps in Acharapakkam Town Panchayat | Vil Ambu | வில் அம்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, March 30, 2020

அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் | 29.03.2020 | Corona Precaution steps in Acharapakkam Town Panchayat | Vil Ambu | வில் அம்பு


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று (29.03.2020)  சுற்றுவட்டார பகுதியில் 15 வார்டுகளிலும்  மனநலம் பாதிக்கபட்டவர்கள், வீடற்ற ஏழைகள்  கண்டறியப்பட்டு பேரூராட்சியின் செயல்அலுவலர் முனுசாமி  ஹேண்டு இன் ஹேண்டு மேற்பார்வையாளர் நவரத்தினம், மற்றும் பரப்புரையாளர் வர்ஜனா  ஆகியோருடன இணைந்து உணவு வழங்கினர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சியின் செயல்அலுவலர் முனுசாமி  அவர்களின் தலைமையில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு ஆலோசனை கூட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று (29.03.2020) நடைபெற்றது.  
இந்த கூட்டத்தில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன். தன்னார்வலர்கள் கண்ணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் நோய் தடுப்பிற்காக ஊரடங்கு உத்தரவினை ஒழுங்குபடுத்த பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பணி இடத்தில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment