வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அதிர்ச்சி ரிப்போர்ட்.! 100 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.! 32 லட்சம் உயிரிழப்பு.! Corona Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 29, 2020

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 100 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.! 32 லட்சம் உயிரிழப்பு.! Corona Latest News

கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். 32 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்படும். - பன்னாட்டு மீட்பு குழு (IRC -International rescue committee)
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பேரிடராக இருக்கிறது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு.

இந்த தொற்றானது வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.

இந்த கொரோன வைரஸால், இதுவரை உலக முழுக்க 31,38,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,18,010 பேர் இந்த கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 9,56,064 பேர் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இந்நிலையில் பன்னாட்டு மீட்பு குழு அமைப்பானது (IRC -International rescue committee) அண்மையில் தனது இணையதள பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 100 கோடி பேர் வரையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், 32 லட்சம் பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால், ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும். எனவும் குறிப்பிட்டு விரிவான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியானது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments:

Post a Comment