வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை ஆய்வு | Thirukazhukundram Jamabandhi News | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 30, 2020

திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை ஆய்வு | Thirukazhukundram Jamabandhi News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் 1429-ல் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி துவங்கியது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் .ஜான்லூயிஸ் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டு தாலுக்காவிற்குட்பட்ட மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்டங்களுக்கான வருவாய் கணக்குகளை பார்வையிட்டார்


இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில் நடப்பு பசலி (1429) வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி 29.06.2020 முதல் அடுத்த மாதம் 15.07.2020 வரை நடைபெறுகிறது

தாலுக்காவிற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மேற்க்கண்ட தினங்களில் -சேவை மையங்கள் அல்லது URL http://gdp.tn.gov.in/Jamabandhi என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என கேட்டுக் கொண்டார்

வட்டாட்சியர் தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத்,   தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள், ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment