வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Thirukazhukundram Taluk News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Thirukazhukundram Taluk News. Show all posts
Showing posts with label Thirukazhukundram Taluk News. Show all posts

Sunday, December 18, 2022

திருக்கழுக்குன்றம் பா.ஜ.க.நிர்வாகியை வெட்டிக் கொலை செய்ய முயற்சி.!

செங்கல்பட்டு மாவட்டம் திருகழுக்குன்றத்தை சேர்ந்த பாஜகவின் மாநில நிர்வாகி துரை.தனசேகரை அவர் வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி  வெட்டி படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாஜக உறுப்பினர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

திருக்கழுகுன்றத்தில் புறம்போக்கு இடத்தில் கட்டியதாகக் கூறி கிறிஸ்துவ தேவாலயம் அகற்றம்: பொதுப்பணி துறையினர் அதிரடி.!

திருக்கழுக்குன்றம் அருகே கிருஸ்துவ தேவாலயம் கட்டியிருந்த இடத்தை ஆற்றுக்கால் புறம்போக்கு இடம் என கூறி பொதுப்பணி துறையினர் இடித்து தள்ளினர்.


கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் காரைத்திட்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. வாயலூர் தண்டுக்கரையில் ஒதுக்குப்புறமான பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு 'மெய் சமாதான ஜெபவீடு' என்ற பெயரில் தேவாலயத்தை ஓலை குடிசையில் கட்டினார்.

அங்கு, அப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பிரார்த்தனை செய்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு, குடிசை தேவாலயத்தை, மர்மநபர்கள் தீயிட்டு எரித்தனர். அதன்பிறகு அதே இடத்தில் மீண்டும் தகரம் மூலம் தேவாலயம் கட்டி வழிபட்டு வந்தனர்.

மேற்கண்ட பகுதியில் உள்ள தேவாலயம், ஆற்றுக்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுப்பணி துறை சார்பில் ரமேஷுக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து ரமேஷ், பொதுப்பணி துறை மற்றும், வருவாய்த்துறை, சென்னையில் உள்ள சிறுபான்மை நல ஆணையத்திடம் கால அவகாசம் கேட்டு மனு அளித்தார். இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள், நேற்று மதியம் மேற்கண்ட பகுதிக்கு சென்று, தேவாலயத்தை இடித்து தள்ளினர். இதையறிந்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். 

அதற்குள் அதிகாரிகள், தேவாலய கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், 'இந்த கிருஸ்துவ ஆலயம் அமைக்கப்பட்ட நாள் முதல் சிலர், தேவாலயத்துக்கு எதிரான செயல்களை செய்கின்றனர். பாஜவை சேர்ந்தவர்கள் மற்றும் சிலரின் பேச்சை கேட்டு, பொதுப்பணி துறை அதிகாரிகள் எவ்வித அவகாசமும் கொடுக்காமல் தேவாலயத்தை இடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அவசர, அவசரமாக தேவாலயத்தை இடித்தது வேதனையளிக்கிறது என்றார். இதுபற்றி பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த கட்டிடம் ஆற்றுக்கால் புறம்போக்கில் கட்டப்பட்டு இருந்தது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது' என்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 14, 2021

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக்குளம் | மூலிகை நீரால் நிரம்பி ரம்மிய காட்சி | Thirukazhukundram Sangu Theertha Kulam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் சங்குதீர்த்த குளம் அமைந்துள்ளது.

பிரசித்திபெற்ற இக்கோயில் சங்குதீர்த்த குளத்தின் நீர்வரத்து மழைக்காலத்தின்போது, மலையில் இருந்து மூலிகை வளத்துடன் அடிவாரத்துக்கு வரும் மழைநீரை வடிகட்டி, சுத்தமான நீராக சங்குதீர்த்த குளத்துக்கு செல்லும் வகையில் 4 கால்வாய்கள் அமைந்துள்ளன.


ஆனால், கால்வாய்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், கனமழை பெய்துவரும் நிலையிலும் குளத்துக்கு நீர்வரத்து இல்லை என நீர்நிலை ஆர்வலர்களும், பக்தர்களும் கடந்த சில ஆண்டுகளாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து துறைரீதியாக புகார் மனுக்களும் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளத்தை சுற்றியுள்ள நீர் வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் குளத்திற்கு நீர் வரத்துக்கு வழிவகை செய்தனர். 

இதனை தொடர்ந்து அண்மையில் பெய்த மழையின் காரணமாக சங்குதீர்த்த குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் தற்போதுதான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குளம் முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், குளம் பாரம்பரியமாக தற்போது காட்சியளிப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, June 30, 2020

திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராம கணக்குகளை ஆய்வு | Thirukazhukundram Jamabandhi News | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம் , திருக்கழுக்குன்றம் தாலுக்காவில் 1429-ல் பசலிக்கான வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி துவங்கியது. 
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் திருக்கழுக்குன்றம் தாலுக்கா அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டு தாலுக்காவிற்குட்பட்ட மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்டங்களுக்கான வருவாய் கணக்குகளை பார்வையிட்டார். 


இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறிப்பிடுகையில் நடப்பு பசலி (1429) வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு பணி மற்றும் ஜமாபந்தி 29.06.2020 முதல் அடுத்த மாதம் 15.07.2020 வரை நடைபெறுகிறது. 

தாலுக்காவிற்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை மேற்க்கண்ட தினங்களில் இ-சேவை மையங்கள் அல்லது URL http://gdp.tn.gov.in/Jamabandhi என்ற இணையதளம் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம் என கேட்டுக் கொண்டார். 

வட்டாட்சியர் தங்கராஜ், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக்ரகுநாத்,   தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சக்திவேல், வட்ட துணை ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள், ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Sunday, May 17, 2020

1000 குடும்பங்களுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பில் திருக்கழுக்குன்றம் அருகே அ.தி.மு.க வழங்கிய கொரோணா நிவாரணம் | ADMK Giving Corona Relief at Periyakattupakkam Thirukazhukundram | Vil Ambu News


கொரோணா நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
அது போல் காஞ்சி மத்திய மாவட்டம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகாட்டுப் பாக்கம், அமிஞ்சிகரை, வீராபுரம், ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு  ஒன்றிய அதிமுக அவைத் தலைவரும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  ரகுராமன் ரெட்டியார் ஏற்பாட்டில் காஞ்சி மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் என கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். 
மேலும், ஏழை எளியோருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் தமிழக அரசுக்கும், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய அவைத் தலைவருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 
இதில் மத்திய  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், மத்திய மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர். பிரவீன் குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன்,  நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சந்திரபாபு, வள்ளிபுரம் ரவிக்குமார், ஹரிதாஸ், துரை, செந்தில்குமார், மணிகன்டன், அர்ஜுணன் உள்பட பலர் உடனிருந்தனர்.