வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: corona Relief
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label corona Relief. Show all posts
Showing posts with label corona Relief. Show all posts

Saturday, January 15, 2022

சித்தாமூர் அருகே பொங்கல் விழாவில் ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்..!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேன்னேரிபட்டு கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு அரிசி காய்கறி பொங்கல் புத்தாடை  அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிராமங்களில் டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச கையேடு உள்ளிட்டவைகளை சமூக சேவகர் கா.ரகு தம்பதி ஷைனிஷெர்லின் ஏற்பாட்டில் வழங்கினர்.


இந்நிகழ்வில் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ப.ஏ.சிற்றசு புத்திரன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரும் மற்றும் சித்தாமூர் ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் க.நிர்மல்குமார் ஆகியோரின் தலைமையில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் சித்தாமூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் புகழேந்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் செங்கல்வராயன், பி.எம்.ஸ்டாலின், வழக்கறிஞர் ஆகாஷ், அமைந்தங்கரனை ஊராட்சி மன்ற தலைவர் இ.ராஜசேகரன், கிளை செயலாளர்கள் தேவராஜன் மணி செல்வன் உதயகுமார் ஆனந்தன் தாமோதரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் விசுவநாதன், இளங்கோவன், ரமேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செய்யூர் வட்டார செய்திகள் 


முந்தைய செய்யூர் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, August 22, 2020

உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மூலம் மேலும் 6 கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foudation giving Corona Relief at Uthiramerur Taluk


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 6 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் 22.08.2020 அன்று வழங்கப்பட்டது.
மணல்மேடு, ஒழுகரை, தளவாரம்பூண்டி, மருத்துவம்பாடி, மருதம், வினோபா நகர் ஆகிய கிராமங்களில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 300 குடும்பத்தினர்களுக்கு சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உயிர் பவுண்டேஷன் மூலமாக அதன் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். ஏற்கெனவே, உத்திரமேரூர் வட்டத்தில் இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 13, 2020

வேலாமூர் காட்டுக்கரணை பகுதிகளில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் | Rural Star Trust Giving Corona Relief at Kattukkaranai and Velamur Panchayats | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் காட்டுக்கரணை ஊராட்சியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினர்கள், இருளர் இன மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட சுமார் 120 குடும்பத்தினர்களுக்கு அபயா பவுண்டேஷன் மற்றும் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் இணைந்து அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகளை அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ்பாபு மற்றும் மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மா.ஜின்னா பாஷா ஆகியோர் முன்னிலையில் 11.06.2020 அன்று வழங்கினர்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவில் மத்திய மாநில அரசுகள் பலகட்ட தளர்வுகளை ஏற்படுத்தினாலும், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதி மக்களின் நலன் கருதி நிவாரணப் பொருட்களை வழங்கும் ஏற்பாடுகளை “எண்ணங்களின் சங்கமம்” தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அ.டோமினிக் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரம்யா, வேலாமூர் ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன், யு.எஸ்.எப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அன்பழகன், இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இரமேஷ், தன்னார்வலர்கள் தணிகைக்குமார், ஏகப்பன், அசோக்ராஜ், வினோத், ரவிக்குமார், சி.தாஸ், சேதுபதி புனிதவேல் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Thursday, May 21, 2020

பொறகால் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Doctor Senthil Trust at Poragal | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறகால் ஊராட்சியில், நன்னிலம் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக சுமார் 300 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
பொறகால் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலி வேலைக்கு செல்வதையே தங்களது பிழைப்பாதரமாக கொண்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதால் அவர்களுக்கு தேவையான அரிசியானது நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.பி.செந்தில் தலைமையில், தானம் வயலக பரஸ்பர இயக்கத்தின் ஆலோசகர் ஆதி.இராமலிங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முறையாக அரிசி பைகளை பெற்றுச் சென்றனர். 
இந்த நலத்திட்ட உதவிகளுக்காக பொறகால் கிராம மக்கள் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தை வெகுவாக பாரட்டினர். இந்த நிகழ்வின்போது பொறகால் ஊராட்சி திமுக செயலளார் ஜோதி உடனிருந்தார். 
2019-ம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள நல்லமாங்குடி எனுமிடத்தில் டாக்டர். செந்தில் அவர்களால் துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனமானது ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், இயற்கை வளங்களை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளையும், கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் பாதித்துள்ள இந்த தருணத்தில் ஏழை மக்களுக்கு தேவையான நல உதவிகளை செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முகக்கவசங்கள் அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.