வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பொறகால் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Doctor Senthil Trust at Poragal | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 21, 2020

பொறகால் ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given by Doctor Senthil Trust at Poragal | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறகால் ஊராட்சியில், நன்னிலம் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக சுமார் 300 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
பொறகால் ஆதிதிராவிடர் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தினக்கூலி வேலைக்கு செல்வதையே தங்களது பிழைப்பாதரமாக கொண்டுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதார ரீதியாக இப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதால் அவர்களுக்கு தேவையான அரிசியானது நிறுவனத்தின் தலைவர் டாக்டர்.பி.செந்தில் தலைமையில், தானம் வயலக பரஸ்பர இயக்கத்தின் ஆலோசகர் ஆதி.இராமலிங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முறையாக அரிசி பைகளை பெற்றுச் சென்றனர். 
இந்த நலத்திட்ட உதவிகளுக்காக பொறகால் கிராம மக்கள் டாக்டர்.செந்தில் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தை வெகுவாக பாரட்டினர். இந்த நிகழ்வின்போது பொறகால் ஊராட்சி திமுக செயலளார் ஜோதி உடனிருந்தார். 
2019-ம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள நல்லமாங்குடி எனுமிடத்தில் டாக்டர். செந்தில் அவர்களால் துவங்கப்பட்ட இந்த தொண்டு நிறுவனமானது ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், இயற்கை வளங்களை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளையும், கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் பாதித்துள்ள இந்த தருணத்தில் ஏழை மக்களுக்கு தேவையான நல உதவிகளை செய்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான முகக்கவசங்கள் அளித்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment