வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Ramapuram Auto Drivers Family | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 21, 2020

இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | Corona Relief Given to Ramapuram Auto Drivers Family | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் மதுரா இராமாபுரம் பகுதியில் மதர் தெரேசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் முனைவர்.ஜி.கே.தாஸ் ஏற்பாட்டிற்கிணங்க, அன்னை தெரேசா பேரவையின் செங்கை மாவட்ட செயலாளர் அ.டோமினிக் தலைமையில், இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் பக்தவட்சலம் முன்னிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைளுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு தருணத்தில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்திற்கு இ.எம்.ஐ செலுத்த இயலாமலும், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்தினர்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று ஆதரவற்ற விதவைகளுக்கும் 19.05.2020 அன்று வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வின்போது, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் இரமேஷ், சைமன் விக்னேஷ் மற்றும் வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment