எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Velamur Rural Star Trust. Show all posts
Showing posts with label Velamur Rural Star Trust. Show all posts
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம் வேலாமூர் பகுதியில் "ரூரல் ஸ்டார் டிரஸ்ட்" என்ற தொண்டு நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான அ.டோமினிக் அவர்களின் தாயார் ரோசம்மாள் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அச்சிறுபாக்கம் ஒன்றியம், பின்னப்பூண்டி வெள்ளை குளம் பகுதியில் வசித்து வரும் சுமார் 50 இருளர் நபர்களுக்கு ரூரல் ஸ்டார் டிரஸ்டின் தன்னார்வலரும், காலஞ்சென்ற ரோசம்மாள் அவர்களின் மகனுமான அ.அருள் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ரூரல் ஸ்டார் டிரஸ்டின் தன்னார்வலர்கள் அ.லீமாரோஸ், அவினாஷ், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் துணைத்தலைவர் எம்.விநாயகமூர்த்தி, தன்னார்வலர்கள் தமிழ்சுவடி, எஸ்.சுனில்குமார், சிவா, எம்.அருள் (சென்னை ஏர்போர்ட்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், இராமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவ மாணவியர்களுக்கு Human தொண்டு நிறுவனம் சார்பாக மீனாட்சி அவர்களின் நிதியுதவியின்பேரில் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் வழங்கினார்.
பள்ளியின் தலைமையாசிரியர் அருள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்களை சிறப்பாக ஒருங்கினைத்து உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.