வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலாமூர் காட்டுக்கரணை பகுதிகளில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் | Rural Star Trust Giving Corona Relief at Kattukkaranai and Velamur Panchayats | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 13, 2020

வேலாமூர் காட்டுக்கரணை பகுதிகளில் தொண்டு நிறுவனம் வழங்கிய கொரோனா நிவாரணம் | Rural Star Trust Giving Corona Relief at Kattukkaranai and Velamur Panchayats | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் மற்றும் காட்டுக்கரணை ஊராட்சியில் வசிக்கும் நலிவடைந்த குடும்பத்தினர்கள், இருளர் இன மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட சுமார் 120 குடும்பத்தினர்களுக்கு அபயா பவுண்டேஷன் மற்றும் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் இணைந்து அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகளை அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ்பாபு மற்றும் மேல்மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மா.ஜின்னா பாஷா ஆகியோர் முன்னிலையில் 11.06.2020 அன்று வழங்கினர்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவில் மத்திய மாநில அரசுகள் பலகட்ட தளர்வுகளை ஏற்படுத்தினாலும், பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதி மக்களின் நலன் கருதி நிவாரணப் பொருட்களை வழங்கும் ஏற்பாடுகளை “எண்ணங்களின் சங்கமம்” தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அ.டோமினிக் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரம்யா, வேலாமூர் ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன், யு.எஸ்.எப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் அன்பழகன், இராமாபுரம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் இரமேஷ், தன்னார்வலர்கள் தணிகைக்குமார், ஏகப்பன், அசோக்ராஜ், வினோத், ரவிக்குமார், சி.தாஸ், சேதுபதி புனிதவேல் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment