வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நெல் விலையை ரூ.2500/-க்கு உயர்த்த அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம் கோரிக்கை | Farmers asked to goverment Need to increase paddy price | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 05, 2020

நெல் விலையை ரூ.2500/-க்கு உயர்த்த அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம் கோரிக்கை | Farmers asked to goverment Need to increase paddy price | Vil Ambu News


நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.50 என ஆண்டுதோறும் மத்திய அரசு வழக்கமாக அறிவித்து வருகிறது.
அப்படி அறிவித்ததால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என மத்திய அரசு எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில் இந்த ஆண்டு கரீப் பருவத்தின் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.53 உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டைவிட ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளதால் 1 கிலோ நெல்லுக்கு 3 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஊரடங்கினால் பொருளாதார ரீதியாக அனைத்து தொழில் தொடர்பானவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் என சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.
விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் உயர்வுகள் காரணமாக விவசாய உற்பத்தி செலவுகள் மற்றும் இடுபொருள் செலவுகள் அதிகமாகியுள்ள இந்த தருணத்தில் கிலோவுக்கு 3 பைசா மட்டுமே அரசு உயர்த்தியுள்ளதை விவசாயிகள் வேதனையோடு காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்  எம்.வெங்கடேசன் 02.06.2020 அன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் “விவசாயிகளுக்கு அதிகபட்ச விலையாக ரூ.2500 உயர்த்தி மத்திய மாநில அரசுகள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென தெரிவித்ததோடு மத்திய அரசுக்கு விவசாயிகள் சார்பாக கண்டனத்தையும் தெரிவித்தார்”.

No comments:

Post a Comment