வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் தீயனைப்புத் துறையினர் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கொரானா விழிப்புணர்வு ஓவிய போட்டி | Madurantakam Fire Service Coducting Drawing Compition for School Students | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 02, 2020

மதுராந்தகம் தீயனைப்புத் துறையினர் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கொரானா விழிப்புணர்வு ஓவிய போட்டி | Madurantakam Fire Service Coducting Drawing Compition for School Students | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு கொராணா பற்றி விழிப்புணர்வை தூண்டும் வகையில் 31.05.2020 அன்று ஓவிய போட்டி நடைபெற்றது.
தற்சமயம் மக்களை வாட்டி வரும் கொரானா வைரஸ் தொற்று பற்றி பள்ளிக்குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் அவர்கள் விழிப்புடன்  செயல்படவேண்டும் என்பதை திறன்சார் போட்டிகள் மூலமாக நடத்திட மாநில தீயணைப்பு இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்திரவிட்டு இருந்தார்.

அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் க.குமார் அறிவுறுத்தலின்படி மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள 5வயது முதல் 8வயது வரையுள்ள குழந்தைகளும் 9 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகளும் ஓவியப் போட்டியில் கலந்துக் கொண்டனர்.

இதில் 23 பள்ளிக்குழந்தைகள் கலந்துக் கொண்டு பல்வண்ணத்தில் கொரானா பற்றிய ஓவியங்களை வரைந்தனர். இந்த ஓவியப் போட்டி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருவதால் ஒட்டுமொத்த ஓவியங்களையும் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகுழுவினர் சிறந்த முறையில் ஓவியங்களை வரைந்த பள்ளிக்குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகளை மாநில இயக்குநர் சி.சைலேந்திரபாபு வழங்கி பாராட்ட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment