வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மற்றும் சைட்டல் குழுமம் மூலம் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foundation and Sitel Group Giving Corona Relief at Uthiramerur Taluk

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 25, 2020

உத்திரமேரூர் வட்டத்தில் உயிர் பவுண்டேஷன் மற்றும் சைட்டல் குழுமம் மூலம் 130 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Uyir Foundation and Sitel Group Giving Corona Relief at Uthiramerur Taluk

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் மேலும் 3 கிராமங்களுக்கு உயிர் பவுண்டேஷன் மூலமாக கொரோனா நிவாரண உதவிப் பொருட்கள் 20.09.2020 அன்று வழங்கப்பட்டது.   

புத்தளி, இருமரம், கருவேப்பம்பூண்டி ஆகிய கிராமங்களில் சுமார் 130 குடும்பத்தினர்களுக்கு சென்னை தரமணி சைட்டல் குழுமம் (SITEL GROUP) மற்றும் சென்னை சேலையூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உயிர் பவுண்டேஷன் மூலமாக அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் உயிர் பவுண்டேஷனின் நிறுவனர் சி.சி.ஷெலின் ரூபன் மற்றும் மேலாளர் கிறிஸ்டினா ஜஸ்டின் ஆகியோர் தலைமையில், திட்ட ஒருங்கினைப்பாளர் அரங்கநாதன் முன்னிலையில் வழங்கப்பட்டது. சைட்டல் நிறுவனத்தின் மனிதவள இயக்குநர் கல்பக், கள இயக்குநர் சுரேஷ் மற்றும் மனிதவள மேலாளர் மேரி ஆகியோர் ஏற்பாட்டில் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றதோடு சைட்டல் குழுமம் மற்றும் உயிர் பவுண்டேஷனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். உத்திரமேரூர் வட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பலகட்டங்களாக இந்த தொண்டு நிறுவனம் பல்வேறு கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment