வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளை அலட்சியபடுத்தும் அதிகாரிகள் | மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் மோசமான அதிகார பங்கம் | Cooperative Bank Issue against Farmers | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 02, 2020

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளை அலட்சியபடுத்தும் அதிகாரிகள் | மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் மோசமான அதிகார பங்கம் | Cooperative Bank Issue against Farmers | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளை அலட்சியப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகள் கடனுதவி பெறுவதற்கு பான் கார்டு (PAN Card) நிரந்தர கணக்கு எண் கட்டாயமாக தேவைப்படுகிறது. அதற்காக விவசாயிகள் பான் கார்டுகளை ஆன்லைன் மூலமாக பெறுகின்றனர். 

பான் கார்டின் அசல் (Original PAN Card) அட்டையானது ஆன்லைனில் பதிவு செய்தபிறகு பூனேவில் உள்ள அலுவலகத்திலிருந்து அச்சிடப்பட்டு 15 முதல் 30 நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ விவசாயிகளின் கைக்கு வந்தடையும்.

இருந்தபோதிலும், தற்போது டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் நாடு முன்னேற்ற பாதையில் வளர்ந்து கொண்டிருப்பதினால் 10 நிமிடத்திலோ அல்லது 3 நாட்களிலோ ஒரு நகல் பான் கார்டினை ஆன்லைன் மூலமாக பெற்று அதனை தற்சமய பயன்பாடுகளுக்கு கொடுக்கலாம் என்பதே அரசாங்கத்தின் ஆனை. 

எந்தவித அலைச்சலும் இல்லாமல் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பான் கார்டினை எளிதில் பெறுவதற்கான நடைமுறை தற்போது உள்ள சூழலில், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாவப்பட்ட அப்பாவி விவசாயிகள் கடன் பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளை நாடும்போது அவர்கள் அளிக்கும்  பான் கார்டின் நகலை பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்புகின்றனர்.

பான் கார்டு என்னினை உள்ளீடு செய்தாலே போதுமானது என்ற சூழலில் இதுபோன்ற அதிகார பங்கத்தினால் கடும் விரக்தியில் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். 

இதனால் உரிய நேரத்தில் கடன் தொகையினை விவசாயிகள் பெற இயலாத காரணத்தினால் கடும் மன உலைச்சலுக்கு ஆளாவது மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் மேலும் கடன் சுமைகளில் தள்ளப்படுகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் எலப்பாக்கம், எல்.எண்டத்தூர் உட்பட சில கூட்டுறவு வங்கிகளில் தொடர் கதையாகியுள்ளதால் விவசாயிகள்  இதுநாள் வரை டிஜிட்டல் இந்தியா திட்டதின் பயன்களை அனுபவிக்க இயலாத நிலைக்கு தள்ளப்படுவது கடும் வேதனைக்குரியது.

அடிமட்ட ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் உரிய பயிற்சி அளிக்காத காரணத்தினாலும், ஊழியர்கள் இன்னும் அப்டேட் ஆகாத காரணத்தினாலும் அவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு முழிப்பது பாவம் அப்பாவி மக்கள் தான்.

1 comment:

  1. இது போன்ற அரசு அலுவலர்கள் மீதுதகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்....

    ReplyDelete