வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கீழாமூரில் கிளியாற்றில் வெள்ளம் | தற்காலிக பாதையை நேரில் ஆய்வு செய்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Keezhamur Kiliyar River Breaking Roads | MLA Pugazhenthi Visit | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 19, 2020

கீழாமூரில் கிளியாற்றில் வெள்ளம் | தற்காலிக பாதையை நேரில் ஆய்வு செய்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Keezhamur Kiliyar River Breaking Roads | MLA Pugazhenthi Visit | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழாமூர் ஊராட்சியில் கிளியாற்றின் குறுக்கே 6 கோடியே 64 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தற்காலிக சாலையினை அமைத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக சாலையில் உடைப்பு ஏற்பட்டு இராமாபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையானது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 

இதனையடுத்து மண் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைத்து சாலை சரிசெய்யப்பட்டது. இந்த வெள்ளத்தினால் கிளியாற்றின் அருகே உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது.

கடந்த 18.11.2020 மாலை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தற்காலிக சாலையினை நேரில் ஆய்வு செய்து பாலம் சம்மந்தமான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  

மேலும், இந்த தற்காலிக பாலம் எத்தனை மண் மூட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது..? எதனால் பாலம் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்பதனை கேட்டறிந்து பாலத்தினை விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இந்த நிகழ்வின்போது, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment