வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி | 100% Voting Awareness by Revenue Department Staffs at Madurantakam | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, March 21, 2021

மதுராந்தகத்தில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி | 100% Voting Awareness by Revenue Department Staffs at Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் “வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பல வருவாய்துறை ஊழியர்கள் 20.03.2020 அன்று இருசக்கர வாகனம் மூலமாக பேரணி நடத்தினர்".

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.லட்சுமிபிரியா இந்த பேரணியினை துவங்கி வைத்தார். சுமார் 120 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த பேரணியானது மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம், மாம்பாக்கம் வழியாக முதுகரை வரையில் நடைபெற்றது. 

பின்னர், அங்குள்ள மைதானத்தில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியினை ஏற்றக் கொண்டது மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் இந்த விழிப்புணர்வு சென்றுசேர வேண்டும் என உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல்துறையினரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment