வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அனைத்து மக்கள் சக்தி இயக்க மாநில தலைவர் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு…!! | Anaithu Makkal Sakthi Iyakkam with ADMK for TN Election 2021 | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 17, 2021

அனைத்து மக்கள் சக்தி இயக்க மாநில தலைவர் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு…!! | Anaithu Makkal Sakthi Iyakkam with ADMK for TN Election 2021 | Vil Ambu News

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக செயலாளர் விருகை வி. என்.ரவி நியமிக்கப்பட்டு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவரை அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில தலைவர் கலைமகன் எஸ் வெங்கடேசன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தன்னுடைய ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பிற்கு தன்னுடைய முழு ஆதரவை அளிக்கவுள்ளதாகவம், அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க-விற்கு எங்கள் இயக்க நிர்வாகிகள் முழு ஆதரவினை அளிப்பார்கள் எனவும் கலைமகன் எஸ்.வெங்கடேசன் தெரிவித்தார்.

 

மேலும், அனைத்து மக்கள் சக்தி  இயக்கத்தின் தென்சென்னை மாவட்ட இளைரணி தலைவராக D.தினகரன் பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் மாநில தலைவர் கலைமகன் டாக்டர் எஸ்.வெங்கடேசனை ஹோட்டல் சிட்டி  கேட்டில் நேற்று (16.03.2021) நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.


அத்தருணத்தில் இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் இயக்கம் தேர்தல் களத்தில் மேற்கொண்டுள்ள அரசியல் ஆதரவு குறித்து டாக்டர் எஸ்.வெங்கடேசன் எடுத்துரைத்தார்.

`

No comments:

Post a Comment