வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எல்.எண்டத்தூரில் சிறப்பாக நடைபெற்ற தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் | ம.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மல்லை சத்யா போட்டி | Mallai Sathiya DMK Candidate | Madurantakam AC | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, March 17, 2021

எல்.எண்டத்தூரில் சிறப்பாக நடைபெற்ற தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் | ம.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மல்லை சத்யா போட்டி | Mallai Sathiya DMK Candidate | Madurantakam AC | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக கூட்டணி கட்சியான ம.தி.மு.க-வைச் சேர்ந்த மல்லை சத்யா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டமானது மதுராந்தகம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (16.03.2021) நடைபெற்றது. இதனையடுத்து மதுராந்தகம் தொகுதி, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக எல்.எண்டத்தூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தினை அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு சிறப்பாக செய்திருந்தார்.


எல்.எண்டத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்களிடமும் வேட்பாளர் மல்லை சத்யா வாக்குகளை சேகரித்தார்.


இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணிகளின் அமைப்பாளர்கள் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வேட்பாளரை வாழ்த்தினர். பின்னர் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் வேட்பாளர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், கடந்த பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றியைப் போல இந்த சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி 234 தொகுதிகளிலும் கிடைக்கும் எனவும், பொதுமக்கள் இந்த வரவேற்பும், கழக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வரவேற்புகளும் வெற்றிக்கான பலம் வாய்ந்த தீணியாக அமைந்துள்ளதாகவும் மல்லை சத்யா உரையாடினார். 

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க கட்சியின் மாவட்ட செயலாளரும் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment