பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தாரணி (19). இவர் 
பிளஸ் 2 படித்துள்ளார். சட்டம் பயில விண்ணப்பித்து இடம் கிடைக்காததால் 
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐகேட் என்ற பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 
படிக்க விண்ணப்பித்திருந்தார்.
கல்விக் கட்டணம் 6 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் வங்கிக் கடனுக்கு 
விண்ணப்பிக்க தாரணி முடிவு செய்தார். கல்லூரி நிர்வாகமும் அதற்கான 
சான்றிதழை தாரணிக்கு அனுப்பியது.
 
தாரணி வீட்டில் 
அதனடிப்படையில் அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக தாரணி 30 ஆயிரம் 
ரூபாய் சேர்க்கைக் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் வங்கிகளில் கல்விக் 
கடன் பெற வேண்டும் என கூறி அவ்வப்போது தாரணி வீட்டிலிருந்து பெற்றோரிடம் 
பணம் வாங்கியுள்ளார்.
தாய் 
அவ்வாறு அவர் மொத்தமாக ரூ 1.04 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். கடந்த 
வெள்ளிக்கிழமை அன்று அவரது தாயிடம் மேலும் 23 ஆயிரம் பணம் வேண்டும் என 
கேட்டுள்ளார். அந்த பணத்தை அனுப்பினார் தாரணி. இந்த நிலையில் தாரணியின் 
தாய் செல்வராணி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றார்.
இளம் பெண் தற்கொலை 
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது தாரணி வீட்டில் 
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸாருக்கு செல்வராணி 
தகவல் கொடுத்துள்ளார். மதுரை தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பகீர் கிளப்பும் எஸ்எம்எஸ் 
தாரணியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் அதில் கடைசியாக வந்த அழைப்புகளை 
ஆய்வு செய்து வருகிறார்கள். தாரணியின் செல்போனுக்கு கடைசியாக வந்த 
எஸ்எம்எஸ்ஸில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் பெயரில் ரூ 26 ஆயிரம் 
செலுத்தும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் தான் தாரணி ஒரு 
லட்சத்தை இழந்தாரா? அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என 
போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

No comments:
Post a Comment