வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பவுஞ்சூரில் அடகு கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை | Pavunjur Pawn Broker Shop Robbery | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 30, 2021

பவுஞ்சூரில் அடகு கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளை | Pavunjur Pawn Broker Shop Robbery | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பஜாரில் பிரகாஷ் என்பவர் கிருஷ்ணா அடகு கடை என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறம் துளையிட்ட மர்மநபர்கள் உள்ளே சென்று ஒரு கிலோ மதிப்பிலான வெள்ளி பொருட்களை எடுத்துள்ளனர். மேலும் கடையில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் விட்டு சென்றனர்.  இதனால் லாக்கரில் இருந்த 200 சவரன் தங்க நகை தப்பியது.

இலத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு கருதி நேற்று 50க்கும் மேற்பட்ட போலீசார் பவுஞ்சூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போலீசார் பலர் அப்பகுதியில் இருந்தபோதிலும் கடையில் துளையிட்டு திருடி சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் அருகில் உள்ள கடையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுவற்றில் துளையிட்டு மற்றொரு அடகு கடையில் 45 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment