வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு அவர்கள் நம்மை காக்கும் 48- என்ற திட்டத்தின் பெயருக்கு ஆன்மீகமும் விஞ்ஞானமும் கலந்து அருமையான விளக்கம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 18, 2021

மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு அவர்கள் நம்மை காக்கும் 48- என்ற திட்டத்தின் பெயருக்கு ஆன்மீகமும் விஞ்ஞானமும் கலந்து அருமையான விளக்கம்..!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தினை தமிழகம் முழுவதும் சிறப்பாக துவக்கி வைத்தார்.


அப்போது பேசிய
ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன குழுமத் தலைவர் லட்சுமி பங்காரு அவர்கள்,

இந்த திட்டாமானது இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழக முதல்வர்தான் செயல்படுத்தியுள்ளார் எனவும், ஓர் சிற்றூராட்சியில் உள்ள மருத்துவமனையில் இந்த மாபெரும் திட்டத்தினை துவங்கியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், "நம்மை காக்கும்-48- என்ற பெயரில் "48" என்பது 1 மண்டலத்தை குறிப்பதாகவும், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகள், 9 கோள்களை கூட்டி வரும் எண்ணிக்கையே 48 எனவும், 48 மணி நேரம் என்பது மருத்துவர்கள் ஓர் நோயாளியை குணப்படுத்த தேவையான போதிய கால அவகாசம் எனவும், இந்த திட்டத்தின் நோக்கமானது விஞ்ஞான ரீதியாகவும் தெளிவாக ஆராய்ந்தே தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளதாகவும் பெருமிதமாக தெரிவித்தார்.

பொதுவாக மருத்துவர்கள் விபத்தில் சிக்கியவர்களையோ அல்லது பிற தீவிர நோயாளிகளையோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் 24 மணி நேரம் கடந்தால் தான் எதுவும் கூற முடியும் என தெரிவிப்பார்கள். ஆனால், 48 மணி நேரம் என்பது ஓர் நோயாளியை நிச்சயமாக காப்பாற்றுவதற்கான போதுமான நேரம் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும், 48 மணி நேரத்திற்கு ஆகும் செலவினை அரசே ஏற்று பொதுமக்களுக்கு இலவசமாக உள்ளது மிகவும் சிறப்பு என முதல்வரை அவர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News: 

 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment