வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மேல்மருவத்தூர் வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் | இன்னுயிர் காப்போம் திட்டம் (நம்மை காக்கும் 48) துவக்கம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

மேல்மருவத்தூர் வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் | இன்னுயிர் காப்போம் திட்டம் (நம்மை காக்கும் 48) துவக்கம்..!

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 என்ற திட்டமானது நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.


இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனையில் நாளை துவக்கி வைக்கிறார். இந்த திட்டமானது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் நோக்கம்:

சாலை விபத்துக்களில் மிகவும் இன்றியமையாதது அவசரகால சிகிச்சை. ஒருவருக்கு விபத்து ஏற்பட்ட உடன் அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் உள்ளது. காரணம் என்னவெனில், ஒன்றிய, வட்ட அளவிலான பெரும்பாலான மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ கருவிகளோ அல்லது மருத்துவர்களோ இல்லை. இதனால் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளுக்கே சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்கின்றனர். 


ஆனால், சில நேரங்களில் பெரும் பாதிப்புகளை சந்திக்கும் ஓர் மனிதனை கோல்டன் பீரியட்(Golden Peried) என மருத்துவர்களால்கூறப்படும் நேரத்திற்குள் தலைமை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல இயலவில்லை. இதனால் உரிழப்புகள் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல், சீரற்ற சாலை என பல்வேறு காரணங்களால் இந்த கோல்டன் பீரியட்டினை தாண்டியே அடிபட்டவர்களை கொண்டுசெல்ல முடிகிறது. 

இதனை கருத்தில் கொண்டே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னுயிர் காப்போம் திட்டம் (நம்மை காக்கும் 48) திட்டத்தினை துவக்கி வைத்து இதன்மூலம் அவசர கால சிகிச்சையை அருகில் உள்ள மருத்துவமனைகளிலேயே பெற வழிவகை செய்துள்ளார். 


குறிப்பாக முதல் 48 மணி நேரத்திற்கு அளிக்கப்படும் இந்த சேவையானது முற்றிலும் இலவச சேவை என்பது மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்று. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வெளி நாட்டவர் என அனைவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும் என்பது உறுதி என்ற அடிப்படையில், செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சீராகும் சாலைகளும், நம்மை காக்கும் 48 மணி நேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும் , உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம். 


சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் அவர்கள் மேல்மருவத்தூரில் நாளை துவங்க இருக்கும் நிலையில் இதற்கான ஆய்வு பணிகளை கடந்த 7-ம் தேதி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்கள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.Related News: 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை அமைச்சர் மா.சு. ஆய்வு

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment