வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கழிப்பறை சுவர் இடிந்து மாணவர்கள் பலி; ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

கழிப்பறை சுவர் இடிந்து மாணவர்கள் பலி; ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்..!

நெல்லையில் கழிப்பறை சுவர் இடிந்து பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.


உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவமும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும்.' இவ்வாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment