வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கான வட்டி 7% -மாக குறைக்கப்படும்: அமைச்சர் தகவல் | Cooperative Society Interest Rate Reduce | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 02, 2021

கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கான வட்டி 7% -மாக குறைக்கப்படும்: அமைச்சர் தகவல் | Cooperative Society Interest Rate Reduce | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ள கடன்களுக்கான வட்டி விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர்; கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இதுவரை 700 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ள கடன்களுக்கான 12 % வட்டி 7 %-மாக குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் குறித்த ஆய்வு 95% முடிவடைந்துள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் 2500 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல கூட்டுறவு மருந்தகங்களின்‌ எண்ணிக்கையும்‌ ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள்‌ என்கிற அடிப்படையில்‌ அடுத்த 5 ஆண்டுகளில்‌ 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத்‌ தொடரில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்‌ அடிப்படையில்‌ இந்த வருடத்தில்‌, நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள்‌ தமிழ்நாடு முழுவதும்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ துவங்குவதற்கு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment