வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: துளசி செடி மகிமை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 22, 2021

துளசி செடி மகிமை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரம்.!

துளசியின் மருத்துவ குணம் மற்றும் அதன் மகத்துவம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான், நாம் பெருமாள் கோயில், அனுமன் கோயிலுக்கு இறைவழிபாடு செய்ய செல்லும் போது அங்கு வழங்கப்படுகிறது.


இந்து சமயத்தின் தெய்வீக செடியாகவும், அற்புத மூலிகையாக விளங்குகிறது துளசி செடி. இந்த அற்புத செடியின் பெருமைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து சொல்லி விளக்க வேண்டியது இல்லை.

எந்த ஒரு எளிய மருத்துவ பொருட்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள், நம் வாழ்வியலோடு பூஜைக்கான பொருட்கள், மூலிகைகள் போன்ற விஷயங்கள் சமயத்துடன் சேர்த்து மக்களைப் பயன்படுத்த வைத்துள்ளனர்.

துளசியின் மருத்துவ குணம் மற்றும் அதன் மகத்துவம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத் தான், நாம் பெருமாள் கோயில், அனுமன் கோயிலுக்கு இறைவழிபாடு செய்ய செல்லும் போது அங்கு வழங்கப்படுகிறது.

துளசி மாடம் அமைக்க வேண்டிய இடம்:

சூரிய ஒளி விழுகின்ற இடத்தில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு வாசலுக்கு நேராக துளசி மாடம் அமைக்க வேண்டும் என்பது ஆச்சாரியரின் போதனை. நம் வீட்டு தரையை விட தாழ்வான மட்டத்தில் இல்லாமல், சற்று உயரமான இடத்தில் துளசி செடியை அமைப்பது அவசியம்.

வீட்டில் துளசி செடி வைத்து வளர்த்தால் மட்டும் போதுமா? எப்படி வழிபடுவது:

வீட்டில் துளசி செடி வைத்து வளர்த்தால் மட்டும் போதாது. அதனை தினமும் தீபம் ஏற்றி வழிபடுவதோடு, மூன்று முறை வலம் வர வேண்டும்.

துளசி செடியை வலம் வரும்போது அதற்குரிய மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: Mantra For Tulsi Puja

‘பிரசீத துளசி தேவி

பிரசீத ஹரி வல்லயே 

க்ஷீ ரோதமத நோத்புதே

துளசி த்வாம் நமாம்யகம்’

சுவாமிக்கு மாலை சூட்டுவதற்காக துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: Mantra For Picking Tulsi Leaves

‘துளஸ்வமுத சம்பூதா

சதா த்வம் கேசவப்ரியே

கேச வார்த்தம் லுனமி த்வாம்

வரதா பவ சோபனே’

மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளிக் கிழமை அன்றும், துளசி இலைகளை தயவுசெய்து பறிக்காதீர்கள்.

சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை மீறாமல் இருப்பதே நல்லது.

காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் எந்த விதிகளையும் வகுத்து வைத்திருக்க மாட்டார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

பிற ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment