வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 'எங்கும் பாதுகாப்பில்லை' | மேலும் ஒரு மாணவி கடிதம் எழுதுவிட்டு தற்கொலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 18, 2021

'எங்கும் பாதுகாப்பில்லை' | மேலும் ஒரு மாணவி கடிதம் எழுதுவிட்டு தற்கொலை!

பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார் 11ம் வகுப்பு மாணவி. இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோகள் வெளியே சென்ற நேரத்தில், அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். அத்துடன், மாணவியின் அறையில் சோதனை நடத்தினர். 

மாங்காடு போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அதில், Stop sexual Harrasment…. இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி. எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன்.

உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. அம்மா போய்ட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு… பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை... பள்ளி மட்டுமல்ல உறவினர்கள் மற்றும் எங்கும் பாதுகாப்பில்லை... Justice for me' என உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment