வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மீண்டும் ஒரு கோவை அரசுப்பேருந்து விபத்து...! தப்பிய பயணிகள்.! அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 28, 2021

மீண்டும் ஒரு கோவை அரசுப்பேருந்து விபத்து...! தப்பிய பயணிகள்.! அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்.!

கோவை அரசுப்பேருந்து ஒன்று நாமக்கல்லில் விபத்து உள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிலர் மட்டும் காயங்கள் அடையந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.


கோவை அரசுப்பேருந்து ஒன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காகக் கிளம்பியது. இந்தப் பேருந்து நாமக்கல் பள்ளிப்பாளையம் வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்தது. இரவு நேரப் பேருந்தை ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பள்ளிப்பாளையம் அருகே பேருந்தை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநர் சக்திவேல் அசதியில் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சாலையில் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்புச் சுவர் மீது பலமாக மோதியது.

முன் பக்க சக்கரம் 2 அல்லது 3 அடி மேலே தூக்கிக்கொண்டு சுவரில் மோதி பேருந்து நின்றது.

பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. சக பயணிகளின் உதவியால் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற பயணிகளுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

தடுப்புச்சுவரில் மோதி நின்று இருந்த அரசுப் பேருந்தை போலீஸார் க்ரேன் உதவியால் மீட்டு அப்புறப்படுத்தினர். ஓட்டுநர் சக்திவேலை பள்ளிப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் தான் நேற்று காலை கோவையில் சிறுமுகை அருகே சரக்கு லாரி ஒன்று மோது அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் காயம் அடைந்த பயணிகள் 30 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கோயமுத்தூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய கோயமுத்தூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment