வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருமணத்திற்கு தயாராகும் பெண்களே.!! முதல்ல இத படிங்க...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 28, 2021

திருமணத்திற்கு தயாராகும் பெண்களே.!! முதல்ல இத படிங்க...!

திருமணத்தன்று ஒப்பனை செய்துகொண்டாலும், அழகை மேம்படுத்திக்காட்டுவதற்கு சரும ஆரோக்கியம் முக்கியமானது. திருமண நாளுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே, முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.


இது திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையோடு பகல் மற்றும் இரவு நேர சரும பராமரிப்பு முறைகளை செய்ய வேண்டும். ரசாயனப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக, இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

விலை அதிகமான கிரீம்கள், பேஸ் பேக்குகள் போன்றவற்றை வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் அடங்கியுள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்த்து காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கு சிறந்தது.

உணவு, சரும பராமரிப்பு போலவே, போதுமான உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த அமைதியான இரவு உறக்கம் மன மகிழ்ச்சியை தருவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், உடலையும், மனதையும் இளமையாக வைத்துக்கொள்ள முடியும். உடற்பயிற்சி செய்வதால் சரும ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்பு கரையும். உடலின் ஆற்றல் அதிகரிக்கும். முகத்தின் பொலிவு கூடும். திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொழில்நுட்ப மற்றும் பொது செய்திகள் 


முந்தைய தொழில்நுட்ப மற்றும் பொது செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment