வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஜெய்பீம் படம் தற்போது கலைஞர் டிவி சேட்டிலைட் கட்டுப்பாட்டில்..! | Jaibhim Movie Belongs Kalaigner TV Sattlite Rights | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 06, 2021

ஜெய்பீம் படம் தற்போது கலைஞர் டிவி சேட்டிலைட் கட்டுப்பாட்டில்..! | Jaibhim Movie Belongs Kalaigner TV Sattlite Rights | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் ராசாக்கண்ணு என்பவருக்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டது.

சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்திருந்தார். இந்த படம் பழங்குடியினர் குறித்த தாக்கத்தை தனது மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான ஜெய் பீம் படத்தின் தொலைக்காட்சி வெளியீடான சேட்டிலைட் உரிமையை உதயநிதி தலைமையில் இயங்கி வரும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment