வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: *🔴செல்லப்பிராணிக்கு வளைகாப்பு... வளையல், மாலை அணிவித்து விழா... போலீசுக்கு பாராட்டு | Valaikappu for Dog | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News*👆👇🏹
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 06, 2021

*🔴செல்லப்பிராணிக்கு வளைகாப்பு... வளையல், மாலை அணிவித்து விழா... போலீசுக்கு பாராட்டு | Valaikappu for Dog | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News*👆👇🏹

மதுரை மாநகரில் உதவி காவல் ஆய்வாளர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தியது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.


மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளரான சக்திவேல் செல்லப்பிராணிகள் மீது அன்புகொண்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் வளர்க்கும் பெண் நாய் சுஜி கர்ப்பம் ஆனதை அடுத்து அதற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.


மதுரை மாநகரம் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவருக்கு எப்பொழுதுமே செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர் என கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டில் மனிதர்களின் செல்லப்பிராணிகளான நாய்களை வளர்த்து வருகிறார். இதில் சுஜி என்ற பெண் நாய் மட்டும் சக்திவேலுக்கு மிகவும் செல்லமான நாய் எனக் கூறப்படுகிறது. சுஜியை வளர்ப்பதில் எப்போதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பெண் நாய் சுஜி கர்ப்பம் ஆனது. அதற்கு வழக்கமான கருவுற்ற பெண்களுக்கு செய்வது போல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அந்த நாயை மகிழ்விக்க முடிவு செய்தார். இதையடுத்து மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டது. 


வழக்கமாக மனிதர்களுக்கு செய்வது போலவே விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நாயை நடுவீட்டில் அமரவைத்து மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கால்களில் வளையல் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுஜிக்கு பிடித்த 5 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. தன்னுடைய எஜமானின் செயலை பார்த்து மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரை விட்ட பெண் நாய் சுஜி அவர் படைத்த உணவுகளை சாப்பிட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தார் செல்லப்பிராணியிடம் பாசமாக இருப்பது மட்டும் அல்லாமல் வளைகாப்பு விழா நடத்திய உதவி காவல் ஆய்வாளர் சக்திவேலை பாராட்டினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. சக்திவேலின் இந்த செயலுக்கு விலங்கு ஆர்வலர்களும் நெட்டிசன்களும் பாராட்டும், விமர்சனமும் அளித்து வருகின்றனர்.

செல்லப் பிராணி வளர்ப்பு ஆர்வம் நிறைந்த ஒரு செயல் மட்டுமின்றி உடல்நலம், மனநலம், சமூகநலம் ஆகியவற்றை ஒன்றாகக்கொண்டது.

குழந்தைகளிடம் அன்பு, பாசம், கருணை போன்ற குணங்களை வளர்த்தெடுக்க செல்லப் பிராணி வளர்ப்பு தூண்டுகோலாக அமையும் என கூறப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப் பிராணிகள், மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவை. தனக்கு உணவு அளிப்பவர்களிடம் காட்டும் மரியாதையும் அன்பும் அலாதியாவனை. எனினும் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு உரிய காலகட்டத்தில் தடுப்பூசி போடுவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment