வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Police News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Police News. Show all posts
Showing posts with label Police News. Show all posts

Monday, January 10, 2022

கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.!! உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் ஏட்டு..!

தென்காசியை சேர்ந்த 38 வயது தொழிலாளி ஒருவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். 35 வயதான இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 


இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், அப்பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் வாலிபருடனான பழக்கத்தை அந்த பெண் கைவிடவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற பெண் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த தொழிலாளி மாயமான மனைவியை மீட்டு தரும்படி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டி அந்த பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அந்த பெண் இருக்கும் இடம் தெரிந்தது. இதையடுத்துமுத்துப்பாண்டி அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அந்த பெண் ஒரு வாலிபருடன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கள்ளக்காதலனுடன் ஓடிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை மீட்டு கணவருடன் ஒப்படைக்க அழைத்து சென்றார். ஆனால் இரவு நேரம் ஆகி விட்டதால் அந்த பெண்ணை திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு முத்துப்பாண்டி அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அங்கு வைத்து அந்த பெண்ணை உல்லாசத்துக்கு முத்துப்பாண்டி அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் மறுத்ததுடன் இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் புகார்தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,மாவட்ட சூப்பிரண்டு சசாங் சாய் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, January 09, 2022

வசமாக சிக்கிய போலி சிறை அதிகாரி..! நிஜ சிறையில் அடைத்த போலீசார்..! என்ன நடந்தது..?

வேலூர் மாவட்டம், மேல்மொனவூரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்கி, ரூ. 85 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் லோன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். மேலும் உதவி ஆட்சியர் தொலைபேசி எண் எனக் கூறி ஒரு எண்ணை அவர்களிடம் கொடுத்துள்ளார்.


அவர்கள் போன் செய்தபோது உதவி ஆட்சியர் போல் உதயகுமாரே போனில் பேசி ஏமாற்றியுள்ளார். இதை அறிந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் உதயகுமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ. 8 லட்சம் வரை வாங்கி இவர் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், உதயகுமார் வேலூர் மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றுவது போல் போலியாக அடையாள அட்டை தயார் செய்துள்ளார். இந்த அட்டையைப் பயன்படுத்தித்தான் உதயகுமார் மோசடி செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மற்றும் போலி அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய வேலூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, January 07, 2022

செங்கல்பட்டு அருகே கொலையாளிகளை என்கவுன்டர் செய்த போலீஸார்.!

செங்கல்பட்டு போலீஸ் நிலையம் எதிரே பயங்கர வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை மற்றும் காய்கறி கடைக்கார் வெட்டிக்கொலை செய்ததின் பின்னணி. 


செங்கல்பட்டு போலீஸார் இரட்டைக்கொலை செய்த  2 பேரை என்கவுன்ட்டர் செய்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இரு நபரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர். 

மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகின.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ’என்கவுன்டர்’ வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டு குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 05, 2022

#Big_News: தப்பி ஓட முயற்சித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி கைது.!

தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் ரூ.3 கோடி வரை பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்யும் முனைப்பில் தமிழ்நாடு போலீசார் உள்ளனர். ஆனால், முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு, அவருக்கு நெருக்கமானவர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் இருப்பதாகவும், டெல்லியில் இருப்பதாகவும் தகவல் வெளியானதால், தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களுக்கு சென்று அவரை தேடி வந்தனர். ஆனாலும், அவரை பிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வந்தது. காவல்துறையிலேயே அவருக்கு நெருக்கமானவர்கள் இருந்ததால் அவர் தொடர்ந்து தண்ணீ காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அதிமுக செய்திகள் 


முந்தைய அதிமுக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்