வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வசமாக சிக்கிய போலி சிறை அதிகாரி..! நிஜ சிறையில் அடைத்த போலீசார்..! என்ன நடந்தது..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 09, 2022

வசமாக சிக்கிய போலி சிறை அதிகாரி..! நிஜ சிறையில் அடைத்த போலீசார்..! என்ன நடந்தது..?

வேலூர் மாவட்டம், மேல்மொனவூரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், 20 பேர் கொண்ட மகளிர் குழுவை உருவாக்கி, ரூ. 85 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் லோன் வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். மேலும் உதவி ஆட்சியர் தொலைபேசி எண் எனக் கூறி ஒரு எண்ணை அவர்களிடம் கொடுத்துள்ளார்.


அவர்கள் போன் செய்தபோது உதவி ஆட்சியர் போல் உதயகுமாரே போனில் பேசி ஏமாற்றியுள்ளார். இதை அறிந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் உதயகுமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் ரூ. 8 லட்சம் வரை வாங்கி இவர் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், உதயகுமார் வேலூர் மத்திய சிறையில் அதிகாரியாக பணியாற்றுவது போல் போலியாக அடையாள அட்டை தயார் செய்துள்ளார். இந்த அட்டையைப் பயன்படுத்தித்தான் உதயகுமார் மோசடி செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மற்றும் போலி அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய வேலூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment