வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Karnataka Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Karnataka Latest News. Show all posts
Showing posts with label Karnataka Latest News. Show all posts

Sunday, January 09, 2022

மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை..! பள்ளியில் பயங்கரம்..!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், கனங்கூர் கிராமத்தில், அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், ஆசிரியையாக பணி செய்து வருபவர் சினேகலதா. இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றுள்ளார்.

வகுப்பறையில் அவர் செல்போனுடன் இருந்ததை பார்த்த ஆசிரியை சினேகலதா மாணவியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாணவியிடம் தவறாக நடந்து ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 05, 2022

#Big_News: தப்பி ஓட முயற்சித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி கைது.!

தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் ரூ.3 கோடி வரை பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்யும் முனைப்பில் தமிழ்நாடு போலீசார் உள்ளனர். ஆனால், முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.

இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு, அவருக்கு நெருக்கமானவர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலத்தில் இருப்பதாகவும், டெல்லியில் இருப்பதாகவும் தகவல் வெளியானதால், தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களுக்கு சென்று அவரை தேடி வந்தனர். ஆனாலும், அவரை பிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வந்தது. காவல்துறையிலேயே அவருக்கு நெருக்கமானவர்கள் இருந்ததால் அவர் தொடர்ந்து தண்ணீ காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அதிமுக செய்திகள் 


முந்தைய அதிமுக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 04, 2022

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி..!

இரண்டு தினங்களுக்கு முன் மொத்த 3 பேருந்துகளில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலிருந்து மேல்மருவத்தூருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்திருந்தனர். 


இதில் 2 பேருந்துகளில் பயணித்தோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 35 பேருக்கு, இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு பேருந்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன்முடிவில் கூடுதலாகவும் சிலருக்கு தொற்று உறுதிசெய்யப்படலாம் என கணிக்கப்படுகிறது. 
இதனையடுத்து மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதிலும், அன்னை ஆதிபராசக்தி திருவருளால் பக்தர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மேல்மருவத்தூர் செய்திகள் 


முந்தைய ேல்மருவத்தூர் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 12, 2021

20 கிராம் தங்க சங்கிலியை விழுங்கிய பசு.! அறுவை சிகிச்சையின்போது காத்திருந்த அதிர்ச்சி.! | Cow Eated 20 Grams Gold | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

பசு மாட்டிற்கு பல வித நோய்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் ஒரு விநோதமான காரணத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.


அது என்ன காரணம்? எதற்காக நன்றாக இருக்கும் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்?

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஶ்ரீகாந்த் ஹெக்டே என்பவரின் குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்த குடும்பம் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளது. இவர்களின் குடும்ப வழக்கத்தின்படி பண்டிகை நாட்களில் பசுவை வணங்கி வந்துள்ளனர். அந்த சமயம் பசுவிற்கு தங்க சங்கிலி, பூ மாலை ஆகியவற்றை அணிந்து வணங்குவார்கள். 


அந்த வகையில் கடந்த மாதம் தீபாவளி அன்று வழக்கம் பசுவிற்கு 20 கிராம் தங்க சங்கிலியை வைத்து வணங்கியுள்ளனர். பூஜை முடிந்த பிறகு அந்த தங்க சங்கிலியை பசுவின் கழுத்திலிருந்து எடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது அந்த தங்க சங்கிலி அங்கு இல்லாமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த சங்கிலியை வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு பசுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை பசு அந்த தங்க சங்கிலியை விழுங்கியிருக்க கூடும் என்று நினைத்துள்ளனர். அவர்கள் நினைத்து போல் அந்த சங்கிலியை பசு தான் விழுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

அதன்பின்னர் சுமார் 30-35 நாட்கள் வரை பசுவின் சாணத்தில் தங்க சங்கிலி வருகிறதா என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இத்தனை நாள் ஆகியும் சாணத்தில் சங்கிலி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து பசுவை கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அவர் சோதனை செய்து பார்த்ததில் பசுவின் வயிற்றில் தங்க சங்கிலி சிக்கியிருந்தது உறுதியானது.

குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் தங்க சங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் சங்கிலி எடுத்த பிறகும் அந்த குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 20 கிராம் எடையில் இருந்த சங்கிலி தற்போது வெறும் 18 கிராம் எடையுடன் மட்டுமே இருந்தது. தங்க சங்கிலியின் ஒரு சிறிய பகுதியை காணவில்லை. இது அந்த குடும்பத்திற்கு சற்று அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்