வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: போஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்.!! | Murder after Death Poster | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

போஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்.!! | Murder after Death Poster | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ் ஜான்சன் (வயது 28). நேற்றிரவு ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்ற பொழுது மர்ம நபர்கள் ஜான்சனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். 


இதில் ஜான்சனின் முகம் சிதைந்து போனதோடு கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பெலிக்ஸ் ஜான்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் நடத்திய விசாரனையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலை பட்டி கடைவீதியில் சின்ராஜ் என்பவரை வெட்டி கொலை சொந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரிய வந்துள்ளது.

சின்ராஜ் கொலை செய்யப்பட்டபோது, அவரது நண்பர்கள் இரங்கல் போஸ்டரொன்றில் ‘விரைவில்’ என்று அச்சிட்டு போஸ்டர் அடித்திருந்தனர். இந்த ‘விரைவில்’ என்ற வார்த்தைக்கு பின்னணியில், ரவுடி அலெக்ஸூக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சர்ச்சை எழுந்திருந்தது. இந்த ‘விரைவில்’ போஸ்டர் சம்பந்தமாக அப்போதே பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து சில பேரை கைது செய்தனர். அவர்களும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment