வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குழந்தைகளின் உடல் பலம் பெறும்... சிவப்பரிசி ரொட்டி | Red Rice Rotti Preparation | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

குழந்தைகளின் உடல் பலம் பெறும்... சிவப்பரிசி ரொட்டி | Red Rice Rotti Preparation | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். 


நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும். அந்தவகையில் நார்ச்சத்து நிறைந்த சிவப்பரிசி ரொட்டி செய்வது குறித்து பார்க்கலாம்:

தேவையான பொருட்கள்:

சிவப்பரிசி - 250 கிராம்,

வெங்காயம் - ஒன்று,

பச்சை மிளகாய் - ஒன்று,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

கேரட் - ஒன்று,

தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும்.

பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment