வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நிரந்தரமாக சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க திட்டம் | Permanent banned for Cigarettes | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

நிரந்தரமாக சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க திட்டம் | Permanent banned for Cigarettes | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நியூஸிலந்தில் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. புகைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியூஸிலந்து செயல்படுகிறது.


சிகரெட் விற்பனையைத் தடை செய்வதன் மூலம் நியூஸிலந்தில் இளையர்கள் அவர்கள் வாழ்வில் சிகரெட்டைப் புகைத்துப் பார்க்கவே முடியாத சூழலை ஏற்படுத்தமுடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

புகைப் பழக்கத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை நியூஸிலந்து எடுத்து வருகிறது. சிகரெட் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பலன் தருவதற்குக் காலம் பிடிக்கும் என்பதால், கடுமையான திட்டங்களை கையில் எடுக்க நியூஸிலந்து யோசித்து வருகிறது.


அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டம் நடப்புக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027ஆம் ஆன்டு முதல் நியூஸிலந்தில் 14 வயதுடையவர்கள் சிகரெட்டுகளை வாங்க முடியாது என்ற சட்டம் நடப்பில் உள்ளது. அதேபோல் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டினின் அளவும் குறைக்கப்படும். புதிய சட்டம் நடப்பிற்கு வந்தால் பூட்டானுக்குப் பிறகு சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் இரண்டாவது நாடாக நியூஸிலந்து இருக்கும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment