வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் இவ்ளோ நன்மையா ? | Urine delivered by sitting mode is Very Good for Health | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 03, 2021

உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் இவ்ளோ நன்மையா ? | Urine delivered by sitting mode is Very Good for Health | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும்.

இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.

உடலின் உயிரணுக்களில் நிகழும் வளர்சிதைமாற்றங்களின்போது கழிவாக உருவாகும் பல பக்கவிளைவுப் பொருட்களும் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலிருந்து அகற்றப்படல் அவசியமாகும். உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், மேலதிக சில கரையங்கள், மேலதிகமாக உடலிலுள்ள நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.


உடலில் நிகழும் சில மாற்றங்களையும், பல நோய் நிலைகளையும் கண்டறிய சிறுநீர் மாதிரி பயன்படுத்தப்படுகின்றது.இதயத்திலிருந்து வெளிவரும் மொத்த இரத்தத்தில் ஏறக்குறைய 20-25% அளவு இரத்தத்தை சிறுநீரகம் பெற்றுக்கொள்கிறது. இவ்வதிக அளவு இரத்தம் குளாமருலஸ் தந்துகிகளின் வழியாக செல்வதினால் அங்கு இரத்த அழுத்தம் உயர்வாகக் காணப்படுகிறது. இவ்வுயர் இரத்த அழுத்தமே வடிகட்டுதலுக்குக் காரணமாகிறது


பல ஆய்வுகள் நாம் சிறுநீர் கழிக்கும் நிலையை பொறுத்து நமது சிறுநீரின் அளவு மாறுபடும் என கூறுகின்றன. நமது சிறுநீர் சிறுநீரகத்தில் உருவாகிறது.


அதுதான் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டுகிறது. அதன்பின் சிறுநீரானது, சீறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும்; அதனால்தான் நாம் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த முடிகிறது.

சிறுநீர் பையின் கொள்ளளவு 300 மில்லிட்டர் முதல் 600 மில்லி லிட்டர் வரை இருந்தபோதும், அது மூன்றில் இரண்டு பங்கு நிரம்பியவுடன் நாம் சிறுநீர் கழித்துவிடுவோம்


நாம் எப்போது கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றும், எப்போது சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளலாம் என்றும் சிறுநீர் பை எச்சரிக்கை விடுக்கும்.


நாம் ஒரு வசதியான கோணத்தில் உட்கார்ந்தால், சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் வெளியேற அது உதவும் தசைகளையும் தளர்வாக்கும்.


அதன்பின் சிறுநீர் பை சுருங்கி, அது யுரித்ராவில் (சிறுநீர் பையையும் ஆண்குறியையும் இணைக்கும் பகுதி) வழியாக உடம்பிலிருந்து வெளியேறும்.

ஒரு ஆரோக்கியமான மனிதர், சிரமப்பட்டு சிறுநீர் கழிக்க கூடாது. ஆனால் சில சமயங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சிறுநீர் கழிப்பதில் ஆண்களுக்கு பிரச்சனை ஏற்படும்.


விரைவீக்கம் உள்ளவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் அவர்கள் உட்கார்ந்து சிறுநீர் கழித்தால் அது பயன் தரும்.


உட்கார்ந்து சிறுநீர் கழிக்கும்போது யுரித்ரா பகுதியில் அழுத்தம் இலகுவாகி சிறுநீர் கழிப்பது இலகுவாகிறது. பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் தாம்பத்திய வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment