வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நகராட்சி தேர்தலையொட்டி விசிக கூட்டம் | VCK Party Meeting about TN Munsipality Election | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 05, 2021

நகராட்சி தேர்தலையொட்டி விசிக கூட்டம் | VCK Party Meeting about TN Munsipality Election | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரிடம் தென்சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் கதிர். ராவணன் தனது மனைவி வசந்தபாரதி சார்பில் 135 வது வார்டில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். 

இதில் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வீ. கோ. ஆதவன், தமிழ்வளவன், சாதிக், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன், கண்ணன், முருகன், தமிழ்ஒளி, எழில்இமயன், விடுதலை ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வடலூர் 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட ராஜ்குமார் என்பவர் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா ஆகியோரிடம் விருப்பமனுவை கொடுத்தார். இதில் கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், அறங்க. தமிழ் ஒளி, இளந்தமிழன், விஜய், அகஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment