வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தால் ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுப்பார் ஸ்வர்ண கணபதி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 16, 2022

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தால் ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுப்பார் ஸ்வர்ண கணபதி.!

எல்லோருக்கும் தங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்காக தங்க நகைகளை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். உடல் முழுவதும் தங்கத்தால் அலங்கரிக்க முடியாவிட்டாலும் கழுத்திலும், காதிலும் போட்டுக் கொள்ள தங்கம் இல்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. 


பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க தங்க நகை சேகரிக்க வேண்டுமே என்கிற பெற்றோரின் ஆதங்கம் ஒரு பக்கம் இருக்கிறது. இப்படி தங்க நகை மீது ஏக்கம் உள்ளவர்களுக்கு ஸ்வர்ண கணபதி ஸ்வர்ணங்களை அள்ளிக் கொடுக்க செய்யும் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம் வாருங்கள்.

ஸ்வர்ணங்களை அள்ளி கொடுப்பவர் ஸ்வர்ண கணபதி என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் பல ரூபங்களில் இருந்தாலும் அந்தந்த ரூபத்தில் உரிய வரங்களை வாரி வழங்குவதில் வள்ளலாக இருக்கின்றார். கணபதியின் பல்வேறு அவதாரங்களில் தங்கத்தை சேர்பவர்க்கு ஸ்வர்ண வரங்களை அள்ளி கொடுக்கும் ஸ்வர்ண கணபதியாக இருக்கும் இந்த அவதாரமும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

தங்கம் வாங்க அரும்பாடுபட்டு பணத்தை சேகரித்தாலும் நாம் தங்கம் வாங்குவதற்குள், தங்கத்தின் விலை என்னவோ கையில் இருக்கும் பணத்தை விட அதிகரித்து விட்டிருக்கும். இப்படி நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் ஏறிக் கொண்டே செல்லும் தங்கத்தை ஏழ்மையில் இருப்பவர்களால் அவ்வளவு சுலபமாக வாங்க முடிவது இல்லை. தங்கம் வாங்குவதற்கு கூட ஒரு நல்ல நேரம் வர வேண்டும்.

நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருந்தால் வளர்பிறை வரும் நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல வளர்பிறை நாளில் பஞ்சமி திதி எப்போது வருகிறது? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். வளர்பிறை பஞ்சமி திதியுடன் கூடிய நன்னாளில் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்வர்ண கணபதி மந்திரம்: 

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய

மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!


பஞ்சமி திதியில் துவங்கி தொடர்ந்து ஒரு மண்டலம் வரை அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் வரை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். காலை அல்லது மாலை எந்த வேளை உங்களுக்கு உகந்ததாக இருக்கின்றதோ அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து நீங்கள் உச்சரிக்க வேண்டும். பதினோரு முறை இந்த மந்திரத்தை அமைதியாக தியான நிலையில் அமர்ந்து பூஜை அறையில் உச்சரிக்க வேண்டும். காலையில் 10 மணிக்கு உங்களால் உச்சரிக்க முடியும் என்றால் நாற்பத்தி எட்டு நாட்களும் காலையில் 10 மணிக்கு பதினொரு முறை தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.

இப்படி ஒரு மண்டலம் நீங்கள் இந்த சக்தி வாய்ந்த சுவர்ண கணபதி மந்திரத்தை இந்த முறையில் நீங்கள் உச்சரித்து வந்தால் உங்களுக்கு சேர வேண்டிய தங்க நகை சேர்ந்தே தீரும் யோகமுண்டு. எப்படியாவது தங்க நகை சேர்த்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் இது போல் பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாற்பத்தி எட்டு நாட்கள் உச்சரித்து உங்களுக்கான தங்க நகை ஸ்வர்ண கணபதி இடம் வரமாகப் பெற்று கொள்ளலாம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment