வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 10, 2022

கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் பரிதாப பலி.. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்..!

செஞ்சி அருகே கிணற்றில் மூழ்கி மூன்று பெண் சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி திலகவதி. இந்த தம்பதிக்கு ஹேமாவதி, கலையரசி ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். வெங்கடேசனின் உறவினர் மகள் சுபாஷினி.

இந்த மூன்று சிறுமிகளும் திலகவதியுடன் சேர்ந்து நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அருகே இருந்த குட்டை கிணற்றில் மூன்று பேரும் குளிக்கச் சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த திலகவதி கிராம மக்களிடம் கூறினார்.உடேன போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் மூன்று சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு, சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

விழுப்புரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய விழுப்புரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment