வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆரோக்கியமான ராகி ஓட்டை வடை செய்வது எப்படி..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 07, 2022

ஆரோக்கியமான ராகி ஓட்டை வடை செய்வது எப்படி..?

கேழ்வரகு இரும்பு சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். சரி இதில் ராகி ஓட்டைவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

ராகி மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 2 tbsp
எண்ணெய் - 1 tbsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தே.அ
தேவைப்பட்டால் கடலை பருப்பு - ஒரு கைப்பிடி

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து கலந்துவிடுங்கள்.பின் சுடுதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். மாவு நல்ல கெட்டியான பதத்தில் இருக்கக் கூடாது.

பிசைந்ததும் கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
காய்ந்ததும் மாவில் சிறிதளவு எடுத்து ஓட்டை கரண்டியின் பின் புறம் மாவை நன்கு மெலிதாக தட்டி பின் காய்ந்துள்ள எண்ணெயில் போடுங்கள்.

சிறிது நேரம் கழித்து மாவை திருப்பி இரு புறமும் வேக வையுங்கள். நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்ய ராகி ஓட்டைவடை தயார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமையல் குறிப்புகள் 


முந்தைய சமையல் குறிப்புகளைக் காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment