வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து நர்சிங் மாணவியை குடிக்க வைத்து பாலியல் தொல்லை.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 16, 2022

கூல்டிரிங்ஸில் மது கலந்து கொடுத்து நர்சிங் மாணவியை குடிக்க வைத்து பாலியல் தொல்லை.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி பண்ருட்டி - சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் பலத்த காயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுகுறித்து பண்ருட்டி போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்தார். மேலும் நடத்தப்பட்ட விசாரணையின் போது மாணவி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்போது மாணவி கூறியதாவது: 

கடந்த மாதம் 3ஆம் தேதி நர்சிங் பயிற்சி பெறும் பெனிடிக் சுகன்யா, கல்லூரி தாளாளர் டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் நெய்வேலி தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன், பொறுப்பாளர் பர்க்கத்பீவி ஆகியோருடன் நர்சிங் பயிற்சிக்காக ஏற்காடு சென்றேன்.

அங்கு பயிற்சி ஏதும் கொடுக்கவில்லை மாறாக ஒரு வாடகை ரூம் எடுத்து தங்கிய போது என்னுடன் வந்த ஆண்கள் மதுபானங்கள் வாங்கிக்கொண்டு வந்து மது அருந்தினார்கள். என்னிடம் குளிர்பானம் எனக் கூறி குடிக்க வைத்தனர். நான் குடித்து விட்டு மயங்கி விட்டேன் நான் மயங்கியதை பயன்படுத்தி மேற்கண்ட நபர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் ஏற்காட்டில் இருந்து காரில் பண்ருட்டி வந்தடைந்தேன். அப்போது, என்னுடன் படித்த சக மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி விட்டு வீட்டுக்குச் சென்றேன். இதனை அறிந்த எனது சகோதரர் என்னிடம் சரியாக பேசாமல் வருத்தத்தில் இருந்தார். இதனால் வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்றேன் என்றார்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பர்க்கத்பீவி, அன்பழகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு மாவட்ட செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment