வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் 5-வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 16, 2022

மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் 5-வது படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் அடங்கிய கிராமங்களில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

 

ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு அலுவலகத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 08 கிராம உதவியாளர் பதவிகள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tiruvallur.nic.in-யை பாடவையிடுவதன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை ஜனவரி 20 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவிறக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சுயவிவரம் மற்றும் கல்வித்தகுதி சான்று மற்றும் சாதிச்சான்றுதல் ஆகியவற்றை திருவள்ளூர் வாட்டாச்சியர் அலுவலகத்திற்கு ஜனவரி 20-க்குள் கிடைக்குமாறு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம்.

வேலைவாய்ப்புக்காக முழு விவரம்:

  • நிறுவனத்தின் பெயர் - Revenue Department (tiruvallur)
  • பதவியின் பெயர் - கிராம உதவியாளர்.
  • காலியிடங்களின் எண்ணிக்கை - 08.
  • வேலை வகை - தமிழக அரசு வேலை.
  • பணியிடம் - கும்மிடிபூண்டி.
  • விண்ணப்பிக்கும் முறை - ஆஃப்லைன்.
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - ஜனவரி 20, 2022.
  • அதிகாரபூர்வ இணையதளம் - https://tiruvallur.nic.in/.
  • அஞ்சல் முகவரி - tiruvallur Taluk Office, JN Road, NH716, Thiruvallur, Tamil Nadu - 602001.


கிராம உதவியாளர் பனிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 01.01.2022-யின் படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, SC/ST மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் 35 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழை இன்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக விண்ணப்பதாரர், திருவள்ளூர் மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்த பட்சம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் தகவலுக்கு கீழே உள்ள அரசின் அதிகாரப்பூர்வ அறிவிபின் லிங்கில் காணலாம்.
https://tiruvallur.nic.in/notice_category/recruitment/

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வெலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment