வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கணவரை காணவில்லை.. சினிமா பாணியில் களமிறங்கிய மனைவி.. அப்படி என்ன செய்தார்..?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, April 24, 2022

கணவரை காணவில்லை.. சினிமா பாணியில் களமிறங்கிய மனைவி.. அப்படி என்ன செய்தார்..?

சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார். 


சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார்.சேலம்‌ மாவட்டம்‌, வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிவராமன். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிவராமன் கடந்த 7 ஆம் தேதி வீட்டிலிருந்து வேலை நிமித்தமாக வாழப்பாடி செல்வதாக கூறிக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரது நண்பர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் இல்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின்‌ பேரில்‌ வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன சிவராமனைஇ தீவிரமாக தேடி வருகின்றனர்‌. ஆனால் கணவர் காணமால் போகி 19 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன கணவரை தேட மனைவி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதாவது ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒலிபெருக்கி மூலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று தனது கணவன் குறித்து கேட்டறிந்து , தேடி வருகிறார். குறிப்பாக முத்தம்பட்டி, நீர்முள்ளிகுட்டை, சிங்கிபுரம்‌, அயோத்தியாபட்டணம்,‌ வலசையூர்,‌ குள்ளம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேடும்‌ பணியில்‌ ஈடுபட்டு  வருகிறார். 

மேலும் ஆட்டோவில் தனது கணவர் புகைப்படம் இருக்கும் போஸ்டர் ஒட்டி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது கணவரை தேடி வருகிறார்‌.கணவரை தேடி மனைவியும், அப்பாவை தேடி மகனும் மகளும் நாள் கணக்கில் இவ்வாறு கிராம கிராம சென்று வருகின்றனர். கணவனைக்‌ காணவில்லை என்று புகார்‌ கொடுப்பதோடு நிறுத்திவிடாமல்‌ ஆட்டோவில்‌ வீதி வீதியாக சென்று தானும் களத்தில் இறங்கி தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளை மக்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சேலம் மாவட்ட செய்திகள் 


சேலம் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment