வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Acharapakkam BDO News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Acharapakkam BDO News. Show all posts
Showing posts with label Acharapakkam BDO News. Show all posts

Sunday, December 26, 2021

எலப்பாக்கத்தில் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அச்சிறுபாக்கம் ஒன்றிய குழுத் தலைவர்.!

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 


இந்த தடுப்பூசி முகாமினை ஒன்றியகுழுத் தலைவர் கே.கண்ணன் நேரில் பார்வையிட்டார். அப்போது, எலப்பாக்கம் தி.மு.க. கிளைச் செயலாளர் பொன்னிவளவன் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, சசிகலா, ஊராட்சிமன்றத் தலைவர் ஆதிலட்சுமி கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

எலப்பாக்கம் செய்திகள் 


முந்தைய எலப்பாக்கம் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

இனி எலப்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளே இருக்காது..? - அரசின் திட்டப்பணிகளுக்கு பச்சை கொடி..!

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் அரசுக்கு சொந்தமான சுமார் 56 ஏக்கர் நிலத்தில் 75% நிலத்திற்கு மேலாக சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த இடத்தில் ஓர் பகுதியை எலப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து குப்பை கொட்டிவந்தது. இத்தருணத்தில், இரு தினங்களுக்கு முன்னர் எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அருந்ததிபாளையம் (ஈச்சங்காடு) பகுதியில் கிராம ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு ஆக்கிரமிப்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருடன் பல ஆக்கிரமிப்பாளர்கள் சேர்ந்து கொண்டு தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் அராஜகத்தினால்தான் குப்பை கொட்டப்படுகிறது எனவும், தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை அறிந்து அச்சிறுபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும், புகார் அளித்த நபரிடம் நிலத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது உரிய ஆவணங்களை அவர் அளிக்கவில்லை. மேலும், ஊராட்சிமன்ற தலைவர் யாரிடமும் அராஜக செயலில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது.

பின்னர், கிராம நிர்வாக அலுவலக வரைபடத்தின்படி, குப்பை கொட்டப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என்பது உறுதியானது. இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பிரச்சனையின் காரணமாக அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை டிராக்டர் மூலமாக எடுத்து தற்காலிகமாக எலப்பாக்கத்தில் கொட்டப்பட்டது. பின்பு குப்பை அள்ளிய இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இரவோடு இரவாக ஏர் உழுதுள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் நில அளவையர் ஆகியோர் நிலத்தை அளந்து அரசு புறம்போக்கு இடத்தினை அரசு மட்டுமே பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அறிவிப்பு பலகை வைக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.


எனவே, நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் அரசாணைப்படி, நீர்நிலை புறம்போக்கு நிலமோ அல்லது எந்த வகையிலான புறம்போக்கு இடமாக இருந்தாலும்  முழுமையாக ஊராட்சி நிர்வாகத்தின் வசம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், 25 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களின் நிலை என்ன என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி:

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகள் 


முந்தைய அச்சிறுபாக்கம் ஒன்றிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 16, 2021

அச்சிறுபாக்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Minister TM Anbarasan Acharapakkam Camp Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 59 ஊராட்சிகளிலிருந்தும் வருகைபுரிந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். 


மேலும், வீடு வழங்கும் திட்டம், கர்பிணி பெண்களுக்கான நல உதவிகள் வழங்குதல், ஊனமுற்றோருக்கான நலத்திட்டம் வழங்குதல் என பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள்  மற்றும் ஆணைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார். 


உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாலருமான க.சுந்தர், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இ.ஆ.ப ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



இந்த முகாமில் வேளாண் துறை சார்பாக மின் தெளிப்பான், விதைப்பான், மரம் ஏறும் கருவி உள்ளிட்ட நவீன விவசாய கருவிகளும், மரக்கன்றுகள், விதைகள் உள்ளிட்டவைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளி கல்வித்துறை சார்பாக ஊனமுற்ற மாணவருக்கான  சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.



நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழுத் தலைவர் கே.கண்ணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில் தி.மு.க- ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்பட்ட 13523 மனுக்களில் 3150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், மீதுமுள்ள மனுக்களில் 575 மனுக்கள் பரிசீலினையில் உள்ளன எனவும் தெரிவித்தார். 


மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் பட்டா கோருபவர்களின் மனு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களும் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவத்தார்.


இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,  மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தா கோகுலக்கண்ணன், மாலதி, ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய,  ஊராட்சி அளவிலான பல தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதார துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளை கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வின் போது கூட்டத்தில் இருந்த நரிக்குறவர் பெண் ஒருவர் எனக்கும் நலத்திட்ட உதவிகள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கையை வைத்து பின்னர் மணி மாலையை அமைச்சர் உள்ளிட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அணிவித்தது குறிப்பிடத்தக்கது. 




டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, January 03, 2021

எலப்பாக்கத்தில் அரசின் திட்டமே குப்பை தொட்டியாக மாறிப் போச்சு..! அரை அடி ஆழத்தில் குடிநீர் குழாய்கள்..! நாற்று நடும் நிலமையில் உள்ள சிமெண்ட் சாலை..! | A Story of "Damaged Elapakkam Village" due to Government Officers | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் (Solid Waste Management System – SWM) மூலமாக குப்பைகளை தூய்மை காவலர்கள் சேகரிக்கின்றனர். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி எலப்பாக்கம் வருவாய் கிராமத்தில் 2192 குடும்பங்களும், பின்னப்பூண்டி வருவாய் கிராமத்தில் 286 குடும்பங்களும் என மொத்தம் 2478 குடும்பங்கள் இருந்தன.

ஆனால் தற்போது அதன் விகிதம் அதிகமாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்கும் திட்டமானது அதிக மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிகளுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் எலப்பாக்கம் கிராம ஊராட்சியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 300 குடும்பங்களுக்கு 1 டிரைசைக்கிள் வழங்கப்படும். இந்த திட்டதிற்காக டிரை சைக்கிள் வழங்கப்பட்டு குப்பைகளை தூய்மை காவலர்கள் நல்ல முறையிலேயே சேகரித்துவந்தனர். ஆனால் அந்த குப்பைகளை எலப்பாக்கம் சுடுகாட்டிற்கு அருகிலேயே கொட்டிவிடுகின்றனர். சில சமயங்களில் முறையற்ற செயலாக அதனை தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  

எனவே, அந்த இடத்தில் குப்பையை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், குப்பைகளை ஒருநாளும் தரம் பிரிப்பதில்லை எனவும் தெரியவருகிறது. ஆனால் பல இலட்சம் மதிப்பீடு செலவு செய்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரிக்க குழி அமைத்து அதற்கு மேற்கூரையை அமைத்தாக அரசு அறிக்கை கூறுகிறது. ஆனால் அந்த திட்டம் பற்றி இந்த தூய்மை காவலர்களுக்கு எந்த அதிகாரியும் எடுத்து கூறவில்லையா என தெரியவில்லை. இச்செய்தியில் உள்ள புகைப்படத்தினை பார்த்தால் அனைவருக்கும் புரியும்.


இப்படி அரசு திட்டமே செயல்பாடின்றி குப்பையாக உள்ளது எனவும், உரிய புறம்போக்கு நிலத்தினை தேர்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குப்பையை முறையாக தரம் பிரித்து கொட்ட வேண்டும் எனவும் கடந்த வாரம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், இத்திட்டம் முழுமையாக முடங்கி எலப்பாக்கம், பின்னப்பூண்டி ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கப்படாமல் ஊராட்சியே குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் பல இடங்கள் திடீரென பட்டா நிலமாக மாறிவரும் நிலையில் குப்பையை கொட்டுவதற்கு புறம்போக்கு நிலம் எங்கு உள்ளது என்பதனை நீங்களே தேர்வு செய்து தாருங்கள் என பொதுமக்களிடமே அதிகாரிகள் கோரியது மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது.

மேலும், 10 ஆண்டிற்கு முன்னர் சாலைக்கு அருகே புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கூறப்படும் நிலையில் அதன்பிறகு இருமுறை சாலை போடப்பட்டு சாலையின் உயரம் அதிகமான பின்னரும் ½ அடி ஆழத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இதனால் கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சாலையில் செல்லும்போது மாதத்திற்கு இரு முறை ஆங்காங்கே குழாய்கள் சேதமடைகிறது. மேலும் குடிநீரில் மண் மற்றும் மாசு கலந்து பொதுமக்களுக்கு நச்சுடன் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த சாலையை பாருங்கள், சுமார் 12 ஆண்டிற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலையானது மீண்டும் புதுப்பிக்கப்படாமல் நாற்று நடும் நிலையில் உள்ளது. இதுகுறிந்து கடந்த 2019-ம் ஆண்டே பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் 2021-ம் ஆண்டு வரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மழைகாலங்களில் பால் சொசைட்டிக்கு செல்வதற்கே கடுமையாக துயரப்படுகின்றனர். காலில் சேற்றுப் புண் மற்றும் கொசுத் தொல்லை என அனைத்து வியாதிகளும் உருவாகும் இடமாக இந்த தெரு மாறியுள்ளது.

பல அரசு ஊழியர்களையும், அரசியல்வாதிகளையும், உயர்நிலை அதிகரிகளையும், இஸ்ரோ விஞ்ஞானிகளையும் உருவாக்கிய இந்த கிராமம் தற்போது சரியான தரமான அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் முழுமையாக மாசடைந்துள்ளது. அரசின் கண்கள் திறக்குமா..? உரிய அரசு பணியாளரை நியமனம் செய்து இந்த ஊராட்சியை பாதுகாக்குமா..? என்பதே மக்களின் ஏக்கமாகவும், கோரிக்கையுமாகவும் உள்ளது.