வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Acharapakkam Union News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Acharapakkam Union News. Show all posts
Showing posts with label Acharapakkam Union News. Show all posts

Sunday, January 09, 2022

அச்சிறுபாக்கம் அருகே தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்ட கண்ணாடி வீரியன் பாம்பு.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட இராவதநல்லூரில் மிகக் கொடிய விஷமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பு பிடிபட்டது.


இராவத்தநல்லூரில் சுமார் 5 அடியுள்ள கண்ணாடி விரியன் பாம்பு அச்சிறுபாக்கம் தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டு பின்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும், துரிதமாக செயல்பட்டு கண்ணாடி வீரியன் பாம்பை பிடித்த தீயணைப்புதுறை நிலைய அலுவலர் பொறுப்பு அ.வீராசாமி, முன்னணி தீயணைப்பு அ.பிரபு, ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்ததற்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, January 07, 2022

அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சிக்கு கிடைத்த தேசிய விருது.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பாக மூன்றாவது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் -2020 -னை பெறுகிறது. 


இந்த விருதுக்கான பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றுள்ளது.அதில், தெற்கு மண்டலத்தில் செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சி 2வது இடத்தில் தேர்வாகியுள்ளது. 

இதனையடுத்து இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரை வெள்ளப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் ப.விஜயகுமார், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் சந்தித்து இனிப்பு வழங்களை வழங்கி வாழ்த்து பெற்றனர். மேலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு ஊராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துகொண்டனர். 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, January 03, 2022

அச்சிறுபாக்கத்தில் நடைபெற்ற விவசாய மின் இணைப்பு திருத்தம் செய்ய சிறப்பு முகாம்.!

தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் இரா.மணிமாறன் செங்கல்பட்டு அறிவுறுத்தலின்படி இன்று அச்சிறுபாக்கம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 01.04.2003 முதல் 31.03.2013 வரை வின்னபித்துள்ள விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம், சர்வே எண் மாற்றம் ஆகியவைகளை மாற்றம் செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. 


விவசாய மின் நுகர்வோர்கள் பலர் இதில்  கலந்துகொண்டனர். மேலும், பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்று, பங்குதாரர்களின் சம்மத கடிதம், கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றை விவசாயிகள்  கொண்டு வந்தனர்.

சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம், சர்வே எண், மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய புதிய கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவைகளை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தகவல் பெற்றுகொண்டனர். 

இதில் பெரும்பேர்கண்டிகை,  மின்னல் சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைபுத்தூர், நுகும்பல், சூனாம்பேடு, சிறுமைலூர் உள்ளிட்ட  அனைத்து பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்வரன் துரைராஜ் தனசேகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தேவநாதன் வணிக ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில், சாதாரண மின் திட்டத்தின் கீழ் செயல்படும் குறிப்புகளை விவசாயிகளுக்கு அச்சிறுப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லியோராஜ் விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

நிதி நிறுவனத்தை கண்டித்து அச்சிறுபாக்கத்தில் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். 

செய்யூர் வட்டம், புத்தூர் பகுதியைச் சார்ந்த நீலமேகம் (வயது 62) என்ற விவசாயி ஜாமின் கையொப்பமிட்டதாக தெரிய வருகிறது. அவரை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தினர் உங்கள் சொத்தை ஜப்தி செய்வதாக மிரட்டியும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் அவர் மன உளைச்சல் ஏற்பட்டு திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.


அதனை தொடர்ந்து தற்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தபோதிலும், தனியார் நிதி நிறுவன அலுவலகம் முன்பு இறந்தவரின் உடலை வைத்தும், சிலர் சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் தற்போது அச்சிறுபாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்